‘அயர்ன் டோம்’ கவசத்தை உருவாக்க ட்ரம்ப் திட்டம்
குறுகிய தூர ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும்

வாஷிங்டன், ஜன,29; ‘அயர்ன் டோம்’ (Iron Dome) எனப்படும் வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்காவுக்காக உருவாக்கப் போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரையின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். உடனடியாக ஒரு அதிநவீன அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கத் தொடங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Iron Dome என்பது வான் பாதுகாப்பு கவசம்

‘அயர்ன் டோம்’ என்பது இஸ்ரேலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசப்படும் பீரங்கி குண்டுகளை இடைமறித்து அழிக்கும் திறன் படைத்ததாகும்.
இஸ்ரேலுக்காக உருவாக்கப்பட்ட மொபைல் வான் கவசம்

இது ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றால் இஸ்ரேலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் மோதலிலும், அக்டோபர் 2024இல் இஸ்ரேல் மீதான ஈரானியத் தாக்குதல்கள் போன்ற பிற நிகழ்வுகளிலும் அயர்ன் டோமின் திறன்கள் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன.







