பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடக்கம்
மதிப்பெண் விவரங்களை உடனே அனுப்ப அறிவுறுத்தல்

சென்னை, பிப்.07; தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.07) தொடங்கியது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் செய்முறைத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை உடனடியாக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12,11,10 வகுப்பு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.



