சீரமைப்பு, புதுப்பிப்பு… சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல்!

சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை மேம்படுத்தி புதுப்பிக்கும் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகங்களை மேம்படுத்தி புதுப்பிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டல வாரியாக 291 அம்மா உணவகங்கள் ரூபாய் 17.6 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் 21 அம்மா உணவகங்கள், மணலி மண்டலத்தில் 12, மாதவரம் மண்டலத்தில் 18, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 29, ராயபுரம் மண்டலத்தில் 29 அம்மா உணவகங்கள் என மொத்தம் 109 அம்மா உணவகங்களை 5.9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், திரு.வி.க நகர் மண்டலத்தில் 18 அம்மா உணவகங்களும், அம்பத்தூர் மண்டலத்தில் 26, அண்ணாநகர் மண்டலத்தில் 16, தேனாம்பேட்டை மண்டலத்தில் 19, கோடம்பாக்கம் மண்டலத்தில் 22 என மொத்தம் 101 அம்மா உணவகங்களை 6.79 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

வளசரவாக்கம் மண்டலத்தில் 15 அம்மா உணவங்களும், ஆலந்தூர் மண்டலத்தில் 16, அடையார் மண்டலத்தில் 16, பெருங்குடி மண்டலத்தில் 18, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 உணவகங்கள் என மொத்தம் 81 அம்மா உணவகங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த மாமன்றக் கூட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் பொது தனியார் கூட்டான்மை (PPP) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் புதிய கழிப்பிடங்களை கட்டவும், புதுப்பித்தல் பணிகளை ஒரு வருடத்தில் முடிக்கவும் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக கழிவறைகளை கட்டவும் மறுசீரமைக்கும் பணிகளும் கழிப்பறைகளை பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மண்டலம் ஒன்று முதல் நான்குக்கு உட்பட்ட பகுதிகளில் 285 இடங்களில் கழிப்பறைகளை அமைக்கவும் பராமரிக்கவும் ரூபாய் 350.39 கோடியும், மண்டலம் ஏழு முதல் பத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 395 இடங்களில் கழிப்பறைகளை அமைக்கவும் பராமரிக்கவும் ரூபாய் 443. 69 கோடியும், மண்டலம் 10 முதல் 15க்கு உட்பட்ட பகுதிகளில் 322 இடங்களில் பணிக்காக ரூபாய் 373.11 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x