சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி குடும்பத்தினரையும், சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவரது தந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜ் நீண்ட நேரம் தனது அறையில் இருந்து வெளிவராததால், அவரது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தாகவும், அங்கு மின் விசிறியில் தனது மகளின் துப்பட்டாவில் தூக்கிட்டு இறந்த நிலையில் சித்ராவின் தந்தை இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் தந்தை காமராஜ், அபிராமபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்து, 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து குறிப்பிடத்தக்கது. அவரது திடீர் மறைவு, குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு முடிவுக்கு தற்கொலை தீர்வல்ல. சொந்த காரணமோ அல்லது மன அழுத்தமோ, உங்களை தற்கொலை எண்ணத்திற்கு தூண்டினால், உடனடியாக மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் 104 ஐ தொடர்பு கொள்ளவும்

இதையும் படிங்க: Capital Punishment: மாணவி சத்யா கொலை வழக்கு.. சதீஷுக்கு மரண தண்டனை.!

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x