ரூ.210 கோடிக்கு மின்கட்டணம்; நுகர்வோர் “ஷாக்”
'கான்கிரீட்' வியாபாரம் செய்பவரை 'அசைத்து' பார்த்த பில்

சிம்லா, ஜன.10 ; இமாச்சலப்பிரதேசத்தில், சிறிய அளவில் தொழில் செய்து வருபவருக்கு மாதாந்திர மின்கட்டணமாக ரூ.210 கோடிக்கு பில் வந்ததால், அதிர்ச்சியில் உறைந்தார். ஹிமர்பூரைச் சேர்ந்த லலித் திமான் என்பவர், கான்கிரீட் தொழில் செய்து வருகிறார். அவரது நிறுவனத்திற்கு மாதாந்திர மின்கட்டணமாக ரூ.210 கோடி செலுத்துமாறு பில் வந்ததால், திமான் “ஷாக்” அடைந்தார். திகைத்துப்போன திமான், உடனே மின்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.







