“உ.பி., மகாகும்பமேளாவை சீர்குலைப்போம்”
காலிஸ்தானி பயங்கரவாதி பன்னுன் மிரட்டல்

பஞ்சாப், ஜனவரி 6 ; உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளாவை சீர்குலைப்போம் என்று, தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “இந்துத்துவா சித்தாந்தத்தை சிதைக்க தயங்க மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார். லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் விமான நிலையங்களில் காலிஸ்தானி மற்றும் காஷ்மீரி கொடிகளை உயர்த்திப் பிடிக்கும்படி அவர் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். “பிரயாக்ராஜ் மகாகும்பமேளா ஒரு போர்க்களமாக மாறும்” என்றும் பன்னுன் அறிவித்துள்ளார்.







