தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக்கிற்கு காயம்
இன்று நடைபெறும் 2ஆவது டி20 ஆட்டத்தில் விளையாட மாட்டார்

சென்னை, ஜன.25; இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறவிருக்கும் இப்போட்டிக்காக அபிஷேக், நேற்றைய (ஜன.24) தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலியால் அவதியுற்ற அவருக்கு, அணியின் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சையளித்தார். இன்றைய ஆட்டத்தில் அபிஷேக்கிற்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது துருவ் ஜூரெல் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.



