காசாவில் 22 பேரை கொன்றது இஸ்ரேல் படை

இதுவரை 46,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

மேற்குகரை, ஜன. 10; காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 22 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஜிபாலியா என்ற இடத்தில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்த பள்ளியின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த 9 நாட்களில் மட்டும் 490 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படைகள் கொன்றதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் 46,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x