ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி
அழகான மற்றும் செழிப்பான காஷ்மீரை காண விருப்பம்

ஜம்மு காஷ்மீர், ஜன.13; ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அங்கு சுரங்கப்பாதையை திறந்துவைத்துப் பேசிய அவர், அழகான மற்றும் செழிப்பான ஜம்மு காஷ்மீரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக, மிகவும் கடினமான சூழ்நிலையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் பேசினார். கடந்த ஆண்டு அக்டோபரில் இப்பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 7 பேருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.







