உற்றார், உறவினரை ‘காணும் பொங்கல்’
கடற்கரைகள், சுற்றுலா தளங்களில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஜன.16; பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று ‘காணும் பொங்கல்’ களைகட்டியுள்ளது. ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்தவர்கள் இன்று கடற்கரைகள், பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் தங்களது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை கண்டு, வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். கட்டிக்கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து உண்டும், அளவளாவியும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சுற்றுலாத் தலங்களில் அலைகடலென மக்கள் திரண்டதால், அங்கு கடைகளை அமைத்திருந்த சிறு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.



