சயிஃப்பை குத்தியவரை வீட்டுப்பணிப்பெண் அறிவார்?
போலீசுக்கு சந்தேகம் வலுத்துள்ளதால், விசாரணை தீவிரம்

மும்பை, ஜன.16; இந்தி நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை அவரது வீட்டுப் பணிப்பெண் அறிந்திருக்க வாய்ப்பிருப்பதாக மும்பை போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அந்தப் பெண்ணை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பணிப்பெண்ணுக்கும் தாக்கியவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்ட பின்னர்தான் சயிஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டதாகத் தெரிகிறது. பணிப்பெண் தான், சயிஃப் அலிகானை தாக்கியவரை வீட்டுக்குள் அனுமதித்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வலுத்துள்ளதால், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.







