“தமிழகத்தில் காலுன்ற முடியவில்லை” - தொல்.திருமாவளவன்

சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நல்லகண்ணு நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியவை இங்கே.
கட்டுப்பாடு.. ஒழுக்கம்
“தோழர் நல்லகண்ணு நூற்றாண்டை கண்ட மாமனிதர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயதும் 100. நல்லகண்ணு அவர்களின் வயதும் 100. 100 ஆண்டுகள் சுயநினைவோடு வாழ்வது அரிதிலும் அரிது. உள்ளத்தாலும் , உடலாலும் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.
பொது வாழ்வில் எவ்வளவு அழுத்தம் இருக்கும். அதை உள்ளம் தாங்கி இருக்கிறது என்றால், அந்த உள்ளம் தூய்மையாக இருக்கிறது என்பது தன் பொருள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறந்து நூறு ஆண்டுகளை எண்ணியிருக்கிறது.
மேலும் படிக்க: காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்
இடதுசாரி.. வலதுசாரி..
இதே 1925 லே தோன்றிய இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் இயக்கம். இதே காலத்தில் 1925 இல் தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி ஆகியவற்றின் பாரம்பரியம். அதே காலகட்டத்தில் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தோன்றியிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள கோட்பாடுகளில் ஒன்று இடதுசாரி கோட்பாடு இன்னொன்று வலதுசாரி கோட்பாடு. இந்திய மண்ணிலே இன்றைக்கு இடதுசாரி அரசியலை பேசுகிற இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் இல்லை.
நினைவில் கொள்ளுங்கள்
கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக இடதுசாரி இயக்கங்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இயங்குகின்றன. அதே இடதுசாரி இயக்கங்களை உறவாக, தோழமையாக, நட்பு சக்தியாக கருதுகிற இயக்கங்களும், இந்த மண்ணில் உண்டு். அவை திராவிட இயக்கங்களும் அம்பேத்கர் இயக்கங்களும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இடதுசாரி இயக்கங்கள் இதற்கு முன்னிலை வகிக்க வேண்டும். இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் அம்பேத்கர் இயக்கம் பெரியார் இயக்கங்களோ சிக்டேரியன் பாலிடிக்ஸ் என்ற அடிப்படையிலே ஒரு இன அரசியலை பேசலாம். மொழி அரசியலை பேசலாம். மாநில அரசியலை பேசலாம்.
காலுன்ற முடியவில்லை
ஆனால் அவை அனைத்தும் வலதுசாரி அரசியலுக்கு எதிரானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வலதுசாரிகளால் ஆக்கிரமிப்பு செய்ய முடிகிறது.
தமிழ்நாட்டில் அவர்களால் காலுன்ற முடியவில்லை. அதற்கு தனிப்பட்ட சில கட்சிகள் உரிமைக்கு வருகிறது என்பதைவிட பெரியார் முன்வைத்த அரசியல் அம்பேத்கரின் அரசியல் அதை தடுத்து நிறுத்துகிறது. நல்லகண்ணு இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். அவருடைய இருப்பே நமக்கு பாதுகாப்பு” என்று உரையை முடித்தார்.






