சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி

சென்னைப் பெருநகரில், ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 6 சதவிகிதம் வரை உயர்த்துவது தொடர்பாக, சென்னைப் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி, உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 2022 – 23ஆம் நிதியாண்டில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவிகிதமும் 601 – 1,200 வரையிலான சதுரடி வரை என்றால் 50 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

மேலும், 1,201 – 1,800 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவிகிதமும் 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதேபோல, வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும் தொழிற்சாலை, கல்வி நிலையப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவிகிதமும் வரி உயர்த்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதிகளில், வணிகப் பயன்பாட்டுக்கு, 150 சதவிகிதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டடங்களுக்கு, 100 சதவிகிதமும் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. இந்நிலையில் 2025- 26ஆம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவிகிதமாக உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்கிறது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. சென்னையை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டடத்தின் அளவைப் பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது.

முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x