முகமது நபிகள் குறித்து வெறுப்புப் பேச்சு
76 எஃப்ஐஆர் பதிவான பிறகும் கைது செய்யப்படாத சாமியார்..!

மும்பை, ஜன.16; மகாராஷ்டிராவில், முகமது நபிகள் குறித்து வெறுப்புப் பேச்சுகளை பதிவிட்ட சாமியார் மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீது 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னரும் அவர் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்குகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மகாராஜ் விவகாரத்தில் காவல்துறை மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சாமியார் மஹந்த் ராம்கிரி மகாராஜ் மீதான குற்றச்சாட்டுகள் வலுவானதல்ல என்பதால், போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.



