ஸ்வீடனில், கல்வி மையத்தில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி
துப்பாக்கியால் சுட்டவரும் வீழ்த்தப்பட்டார்

ஸ்டாக்ஹோம், பிப்.05; ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், வயது வந்தோர் கல்வி மையத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கியால் சுட்டவரின் நோக்கம் குறித்தும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஸ்வீடன் சமூகத்தையும் உலுக்கியுள்ளதாக, அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. இது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல எனவும் ஸ்வீடன் அரசு கூறியிருக்கிறது.



