“இந்தியாவில் ஊக்கமருந்து ஒரு பெரிய பிரச்னை”
தடகள வீரர் நீரஜ் சோப்ரா வருத்தம்

டெல்லி, ஜன.6; ஊக்க மருந்து இந்திய விளையாட்டு வீரர்களிடையே ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதாக பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். ஊக்க மருந்து எடுத்துக் கொள்வதால் மட்டுமே வெற்றிகளைப் பெற முடியும் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பதாகவும், ஆனால் அது உண்மையல்ல ஏனவும் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை, பயிற்சியாளரின் சரியான வழிகாட்டுதல்கள் தான் வீரர்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என, நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.







