‘அவுட் ஆஃப் ஃபார்ம்’ என்பதால் நானே விலகினேன்: ரோகித்
அணியில் சேர்க்கப்படவில்லை என வெளியான தகவலுக்கு மறுப்பு

சிட்னி, ஜன.6; ‘அவுட் ஆஃப் ஃபார்ம்’ என்பதால் சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து தானே ஒதுங்கியதாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவை ஆடும் லெவனிலிருந்து வெளியேற்றி, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பிர் துணிச்சலுடன் செயல்பட்டு பெயர் வாங்கிக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் விதமாக விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக வெளியாகியிருக்கும் தகவல்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.







