தைப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்
மஞ்சள் கொத்து, கரும்பு, சர்க்கரைப் பொங்கல் என குதூகலம்

சென்னை, ஜன.14; தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலை கொண்டாடி வருகின்றனர். புத்தரிசி பொங்கி வழிவதால் அனைவரது வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்று நம்பப்படுகிறது. தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று பாலமேட்டில் நாளையும் ((ஜன.15), அலங்காநல்லூரில் நாளை மறுதினமும் ((ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறவிருக்கின்றது.






