டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல்
பிப்.8ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

டெல்லி, ஜன.7 ; 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 10ஆம் தேதியன்று, வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கு 17ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் வரும் 18ஆம் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்பப் பெற வரும் 20ஆம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.







