திருப்பதியில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி நாளான நேற்று ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்தியங்களுக்குப் பின் கோயில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்திப் பெருமுழக்கங்களுக்கு இடையே வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.







