மாணவி பாலியல் வன்கொடுமை; ஆளுநருடன் விஜய் சந்திப்பு
விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதிசெய்யக் கோரி மனு

சென்னை, டிச.30 ; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்திடுமாறு, ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ஆவது ஆண்டு பொறியியல் படிப்பு பயின்றுவரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆளுநருடன் விஜய் சந்திப்பு

இதுபோன்ற சூழலில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (டிச.30)நேரில் சந்தித்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.
அதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஆளுநரை விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஆளுநர் ரவியிடம் விஜய் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Key words: ஆளுநருடன் நடிகர் விஜய் சந்திப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், விசாரணை தொடர்பாக கோரிக்கை மனு
Actor Vijay meets R.N. Ravi regarding student rape issue submits petition to Ravi, Anna varsity student rape issue






