சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ரோகித் சர்மா கேப்டன்?
துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட வாய்ப்பு

டெல்லி, ஜன.7 ; சாம்பியன்ஸ்கோப்பை தொடரில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து விடுபடும் பட்சத்தில், அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில், இந்தியா வென்ற ஒரே டெஸ்ட் போட்டியில், அணிக்கு தலைமை ஏற்றிருந்தவர் பும்ரா என்பது நினைவுகூரத்தக்கது.







