மதுரை பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

மதுரை, ஜன.13; சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், தமிழ்நாடு பாஜக மாநிலப் பொருளாதாரப் பிரிவின் மதுரை தலைவர் எம்.எஸ்.ஷாவை போக்சோ சட்டத்தில் போலீசார் இன்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த ஆண்டு அளித்த புகாரின் பேரில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷாவை போலீசார் கைது செய்தனர்.






