காங்கிரசுக்கு தன்மானம்தான் முக்கியம் – காங். எம்.பி மாணிக்கம் தாகூர்
"காங்கிரசுக்கு தன்மானம்தான் முக்கியம்" மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் நிச்சயமாக கேட்கும் -காங். எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி.

எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது என காங். எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் காங்கிரசுக்கு பூத்களில் நிர்வாகிகள் இல்லை என்பதை ஏற்க முடியாது”காங்கிரஸ் கட்சிக்கு தன்மானம் மிக முக்கியமானது; அதிகார மமதையில் காங்கிரஸ் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தொண்டர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது; காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது; காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.






