யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்; இளைஞர் கைது
மகாகும்பமேளாவை நடத்தவிட மாட்டேன் என்றும் மிரட்டினார்

லக்னோ, ஜன.12; உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மைஜான் ரசா என்ற அந்த நபர், தனது முகநூல் பக்கத்தில், ஆதித்யநாத்தை கொல்லப் போவதாகவும், பிரயாக்ராஜில் நாளை தொடங்கும் மகாகும்பமேளாவை நடத்தவிட மாட்டேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, ரசாவை கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வெளியிட்ட வீடியோவில், மிரட்டல் விடுத்ததற்கு மன்னிப்புக் கோருவதாக ரசா தெரிவித்துள்ளார்.







