நாக்பூரில் புலிகள், சிறுத்தை இறப்புக்கு காரணம் என்ன?
பறவைக் காய்ச்சலால் உயரிழந்தது பரிசோதனையில் உறுதி

நாக்பூர், ஜன.5 ; மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே, மீட்பு மையத்தில் மூன்று புலிகளும், ஒரு சிறுத்தையும் உயிரிழக்க பறவைக் காய்ச்சலே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் இறந்த அவற்றின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள், மீட்பு மையங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







