கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பீகாரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் கைது..!

பிரயாக்ராஜ், ஜன.6 ; உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், வரும் 13ஆம் தேதி தொடங்கவிருக்கும் கும்பமேளாவில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த பீகாரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். பீகார் மாநிலம் பூர்ணியாவைச் சேர்ந்த அந்த மாணவன், தனது வகுப்பு தோழர் ஒருவரின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆத்திரமூட்டும் பதிவை வெளியிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த மாணவன், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.







