சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நிலநடுக்கம் ..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.0 அளவில் லேசான நிலநடுக்கம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9.06 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது இதை தேசிய நிலநடுக்க ஆய்வு மையமும் உறுதி செய்தது.சிவகாசியில் இருந்து 9.7 கிலோ மீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக இந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் லேசான அதிர்வுகளை உணர்ந்த நிலையில், இதுவரை எந்தவிதமான உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.சில இடங்களில் மட்டும் வீட்டு அலமாரியில் உள்ள பொருட்கள் கீழே விழுந்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில கிராமங்களில் அச்சத்தால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே பீதியுடன் நின்றதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.






