தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த ராணுவ வீரர்
ஒரு பெண்ணும் அவரது கூட்டாளிகளுமே காரணம் எனக் கடிதம்

ஜம்மு காஷ்மீர், ஜன.8 ; ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ண குமார் என்ற அந்த சிப்பாய், தனது தற்கொலைக் குறிப்பில், ஒரு பெண் மற்றும் அவரது கூட்டாளிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானதால், இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அவர்கள், வீடியோ காலில் மிரட்டி தன்னிடம் ரூ.15 லட்சத்தை பறித்ததாகவும் எழுதி வைத்துள்ளார். கிருஷ்ண குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை இறுதிச் சடங்குகளை செய்யப்போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.







