பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை: 4.36 கோடி ரூபாய் வசூல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலில் உள்ள உண்டியல்களில் தங்களது நேர்த்திக்கடனாகப் பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் மற்றும் தொடர்பு விடுமுறையின் காரணமாக மலைக்கோயிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியதை அடுத்து, கடந்த இரண்டு நாட்களாகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரொக்கப் பணமாக 4 கோடியே 36 லட்சத்து 21 ஆயிரத்து 348 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் தங்கம்: 870 கிராம் வெள்ளி: 14 கிலோ 510 கிராம் கிடைத்துள்ளது. இதில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 850 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.

இந்தப் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் எனப் பலரும் ஈடுபட்டனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x