அமெரிக்காவில் பனிப்புயலால் 6 கோடி பேர் பாதிப்பு
பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

கன்சாஸ், ஜன.6; அமெரிக்காவில் வீசும் கடுமையான பனிப்புயலால் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கன்சாஸ், மிசோரி, கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, ஆர்கன்சாஸ் மற்றும் நியூ ஜெர்சியின் சில பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் கன்சாஸ் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளும், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்று, அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.







