‘மது ஒழிப்பு மாநாட்டில் விஜய் பங்கேற்கலாம்’: திருமாவளவன்

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும் என்றும், அவரும் கட்டாயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக மதுவிலக்கு மாநாட்டில், கட்சி வரம்புகளை கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும். எல்லா கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாடாக இருக்கும் போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் உள்ளது. மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. எல்லாவற்றையும் அரசியல், கூட்டணியோடு இணைத்துப் பார்க்கக் கூடாது என்றார்”.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதை அதிமுகவின் தலைவர்களும் வரவேற்றிருந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் தங்கள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x