உற்சாகத்துடன் தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல காளையர் ஆர்வம்

மதுரை, ஜன.16; உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் தொடங்கியது. சுமார் 1,000 காளைகள், 750 காளையர்கள் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அவிழ்த்துவிடப்பட்ட கோயில் காளைகளுக்கு துணை முதலமைச்சரின் தங்கக்காசு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. வெற்றிபெறும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு டிராக்டர், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், தங்கக்காசு என விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டை காண பெருந்திரளானோர் குவிந்துள்ளனர்.



