ஐபிஎல்; கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சி.எஸ்.கே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சூர்யவன்ஷி மீண்டும் மிரட்டல்

டெல்லி, மே.21; ஐபிஎல் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடி

பின்னர் களம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்து வெற்றிக்கு வழிகோலினர்.
ஜெய்ஸ்வால் 36 ரன்களும், சூர்யவன்ஷி 57 ரன்களும் விளாசினர். சஞ்சு சாம்சன் 41 ரன்களும், துருவ் ஜூரெல் 31 ரன்களும் எடுத்தனர்.
சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.







