டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வசூலித்த தொகை எவ்வளவு?
படம் வெற்றி பெற்றாலும் சம்பளத்தை உயர்த்த மாட்டேன்: சசிகுமார்

சென்னை,மே.15; திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் எவ்வளவு வசூலாகியுள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
டூரிஸ்ட் ஃபேமிலி ரூ.50 கோடிக்கும் அதிக வசூல்..!!

சசிகுமார், சிம்ரன்,எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், இதுவரை ரூ.50-கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளருக்கு லாபம்; நடிகர்கள் மகிழ்ச்சி

படம் கணிசமான லாபத்தை தயாரிப்பாளருக்கு ஈட்டிக் கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது. இதனால் படத்தில் அனைத்து நட்சத்திரங்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
குறிப்பாக சசிகுமார் நாயகனாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இது என்பதால் அவர் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்.
சம்பளத்தை உயர்த்தப் போவதில்லை: சசிகுமார்

படம் வெற்றி பெற்றாலும், தனது சம்பளத்தை உயர்த்தப் போவதில்லை என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் முதல் நாளிலேயே ரூ. 2 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில், தான் நடித்த ஒரு படம் மொத்தமே அதே தொகையைத் தான் வசூலித்தது என்றும் சசிகுமார் கூறியுள்ளார்.







