மன்மோகன் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மரியாதை
கைகளில் கருப்புப்பட்டை அணிந்து விளையாட்டில் பங்கேற்பு

மெல்போர்ன், டிச.27; மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில், மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினர்.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்நேற்றிரவு (டிச.26) காலமானார்.அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மன்மோகன் சிங்கிற்கு மரியாதை

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில், மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று (டிச.27) இந்திய வீரர்கள், தங்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினார்கள். மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்கள் கருப்புப்பட்டை அணிந்து கலந்துகொண்டனர்.







