சத்தீஸ்கரில் நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தின் பாஸ்டர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுடன் சண்டை நடைபெற்றது. அவர்கள் இருந்த பகுதியிலிருந்து மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.



