“உள்நாட்டில் விளையாடினால் ஆட்டத்தை புதுப்பிக்கலாம்”
ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை

டெல்லி, ஜன. 8 ; ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு திரும்புவதன் மூலம் ஆட்டத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். நீண்ட காலத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது, இரண்டு காரணங்களுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். “ஒன்று, தற்போதைய தலைமுறையினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மற்றொன்று, உங்களது அனுபவத்தை இளைய தலைமுறையினருக்கு கடத்த முடியும்” எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.







