Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு.!
யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா.?

சென்னை: சி மற்றும் டி குரூப் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “அனைத்து சி மற்றும் டி குரூப் ஊழியர்களுக்கும் ரூ.3,000 உச்சவரம்புக்கு உட்பட்ட தற்காலிக போனஸ் வழங்கப்படும்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு; நாளை முதல் டோக்கன்
கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களைத் தவிர, ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் சிறப்பு ஊதிய விகிதத்தில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,000 சிறப்பு தற்காலிக போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி குழுவில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெற்ற கிராம அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.






