இந்திய அணியின் படுதோல்வி; ஆராய்கிறது கிரிக்கெட் வாரியம்
கௌதம் கம்பீர், ரோகித், கோலி தப்புவார்களா?

டெல்லி, ஜன.8 ; ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்வி குறித்து ஆராய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்டத்திறன், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் துணை பயிற்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இருப்பினும், அவர்கள் மூன்று பேரும் ஆபத்திலிருந்து தப்பிவிடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அவர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது.







