கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்
சமூக வலைதளங்களில் பரவும் 'திக்.. திக்..' காட்சிகள்

சாவோ லூயிஸ், ஜன.13; பிரேசிலில், கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை, அலைசறுக்கு வீரர் காப்பாற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எலும்பியல் மருத்துவர் ஒருவர், அலைசறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெண் கடலில் தத்தளிப்பதைப் பார்த்தார். பின்னர் அப்பெண்ணை மீட்டு அவர் கரைக்கு கொண்டு வந்தார். “நான் எனது கடமையை மட்டுமே செய்தேன்” எனக்கூறிவிட்டு அவர் மீண்டும் கடலுக்கு சென்றுவிட்டார். “கடல் உண்மையில் மிகவும் ஆபத்தானது, அலை உங்களை இழுத்துச் சென்றுவிடும்” என்றும் அவர் எச்சரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.







