சின்னர் மீண்டும் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அசத்தல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒன்றையர் ஆடவர் சாம்பியன் பட்டத்தை இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் கைப்பற்றி சாதித்துள்ளார்.

மெல்போர்ன் ஜன.27; கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. நேற்று மெல்போர்ன் நகரில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், சர்வதேச ஆடவர் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பான போட்டியில் முதல் செட்டை 6-3 என ஜானிக் சின்னர் கைப்பற்றினார். பின்னர் அனல் பறந்து ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டையும் 7-6 எனப் போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ஜானிக் சின்னர் 3வது செட்டையும் 6-3 என வென்று சாதித்தார்.

இறுதியில் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் சாம்பியன் கோப்பையை கைப்பற்றி ஜானிக் சின்னர் சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம், இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற மகத்தான கவுரவம் அவருக்கு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஒன்றையர் ஆடவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜானிக் சின்னருக்கு ரூ.19 கோடி பரிசுப்பணமும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த ஜானிக் ஸ்வெரெவுக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x