கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலைக்கல்லூரிகளில் மகளிருக்கென தனி ஓய்வறை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ரூ.8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள், கஅனைத்து அரசுக் கல்லூரிகளிலும், மாணவிகளுக்கு என தனி ஓய்வறை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், பள்ளிகள், கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக, அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.






