“க்ளென் மேக்ஸ்வெல்லை மணமுடிக்காதது ஏன்?”
நெட்டிசனின் கேள்வியால் நடிகை பிரீத்தி ஜிந்தா கடுங்கோபம்

டெல்லி,மே.14; கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியதால் நடிகை பிரித்தீ ஜிந்தா சினம் கொண்டார்.
சமூக ஊடக தளமான X இல் நடந்த உரையாடலின் போது, நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தாவிடம் நெட்டிசன் ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
பிரீத்தியை மணமுடிக்காததால் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டமா?

“2025 ஐபிஎல் சீசனில் க்ளென் மேக்ஸ்வெலின் மோசமான ஆட்டத்திற்கு அவரும் பிரீத்தி ஜிந்தாவும் மணமுடிக்காதது தான் காரணமா?” என்று நெட்டிசன் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வி நடிகை பிரீத்திக்கு பிடிக்கவில்லை. நெட்டிசனை கடிந்துகொண்ட அவர், “தனக்கு மரியாதை கொடுத்து பாலின சார்பை நிறுத்துங்கள்” என வலியுறுத்தினார்.
புரிந்து கொண்டு கேள்வி எழுப்புங்கள்: பிரீத்தி ஜந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா மேலும் கூறுகையில், “நீங்கள் (நெட்டிசன்) நகைச்சுவைக்காக இந்தக் கேள்வியை கேட்டீர்கள் என்று நம்புகிறேன், நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், புரிந்து கொண்டால், கேள்வி அழகாக இல்லை என்பதை உணர்வீர்கள்..!” என்று ஜிந்தா குறிப்பிட்டார்.
“இந்தக் கேள்வியை எல்லா அணிகளின் ஆண் உரிமையாளர்களிடமும் கேட்பீர்களா, அல்லது இந்தப் பாகுபாடு பெண்களுக்கு மட்டும்தானா? நான் கிரிக்கெட்டில் நுழையும் வரை, பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியாது” என்று X தள பக்கத்தில் பிரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார்.







