கார் பந்தயம்; முடிவில் பின்வாங்கினார் அஜித் குமார்
பாதுகாப்பு கருதி பங்கேற்கப் போவதில்லை: டீம் அறிவிப்பு

சென்னை, ஜன.12; விபத்துக்குப் பிறகு துபாய் கார் பந்தயத்தில் பங்கேற்கும் முடிவிலிருந்து நடிகர் அஜித் குமார் பின்வாங்கினார். பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்துக்குள்ளானதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். விபத்தில் அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அவரது பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. விபத்து தொடர்பாக அஜித்தின் கார் பந்தய குழுவினர் முழுமையாக மதிப்பீடு செய்தனர். அதன் முடிவில், துபாய் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.







