ஓய்வுபெறும் முடிவு; ரோகித் சர்மா ‘U’ டர்ன்?
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எரிச்சல்

மும்பை, ஜன.12 ; டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை, ரோகித் சர்மா மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது ஓய்வு முடிவை எடுத்த ரோகித், அதுபற்றி அறிவிக்காமல் இருந்தார். ரோகித்தின் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது மனதை மாற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓய்வு முடிவில் ரோகித் சர்மாவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எரிச்சலடைந்துள்ளதாக பேசப்படுகிறது.







