“அல்லு அர்ஜூன் கைது துரதிர்ஷ்டவசமானது”
மற்றொரு பிரபல நடிகர் நாக சைதன்யா கருத்து

சென்னை, பிப்.01; அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான புஷ்பா -2 படத்தின் சிறப்புக் காட்சியின்போது ஐதராபாத்தில் அல்லு அர்ஜூனை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
“அல்லு அர்ஜூன் கைது துரதிர்ஷ்டவசமானது”

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளியே வந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் நாக சைதன்யா, “அல்லு அர்ஜூன் கைது நிகழ்ந்திருக்கக்கூடாது;
ஆனால், இதுதான் வாழ்க்கை, அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.







