பாதுகாக்கப்பட்ட நடுவானில் பேரழிவு நிகழ்ந்தது எப்படி?

புரிந்துகொள்ள முடியாமல் திணறும் அமெரிக்க விமான உலகம்

ஆர்லிங்டன், ஜன.31; உலகின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளிப்பகுதியில், விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதி பேரழிவு நிகழ்ந்தது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள அமெரிக்க விமான உலகம் போராடி வருகிறது.

கொலம்பியா மாவட்டத்தின் மீதுள்ள வான்வெளிப் பகுதி தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க அரசின் முக்கியமான கட்டடங்கள் ஆகியவற்றை பாதுகாக்க பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியில் பேரழிவு

அதன்படி, பென்டகன், வெள்ளை மாளிகை மற்றும் பிற வரலாற்றுச் சின்னங்களுக்கு மேல் வணிக நோக்கிலான விமானங்கள் பறப்பதைத் தடுக்கின்றன.

ஆயினும், இப்பகுதியில் விமானப் போக்குவரத்து அதிகம் நடைபெறுவதாக, ஜெட் விமானங்கள் மற்றும் ரீகன் விமானநிலையம் தொடர்பான பல வழக்குகளைக் கையாண்ட விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கருப்புப் பெட்டிகளை ஆய்வு செய்து விசாரணை

தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அதிகளவில் ஆர்லிங்டன் நகரத்தைச் சுற்றி பறப்பதாகவும், பெரும்பாலும் முக்கிய இடங்களுக்கு இடையே உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஏற்றிச் செல்வதாகவும், விமானப் போக்குவரத்துத் துறையின் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானத்தின் இடிபாடுகளிலிருந்து தரவுப்பதிவுகள் என்றழைக்கப்படும் கருப்புப் பெட்டிகளை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளதாகவும், அவை விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x