பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்.6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின் அக்டோபர் மூன்றாம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடுவில் வியாழன், வெள்ளி இரு தினங்கள் மட்டுமே வேலை நாளாக இருப்பதால் ஏழாம் தேதி திங்கட்கிழமை பள்ளிகளை திறக்க ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, தற்பொழுது காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுமுறை முடிந்து அக்.7 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின் காரணமாக கூடுதல் விடுமுறை கிடைக்கப்பெற்றதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







