குண்டு வீசப்பட்டது போல் தெரியும் ஹாலிவுட் பகுதி
லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத்தீக்கு வீடுகளை இழந்தவர்கள் கண்ணீர்

கலிஃபோர்னியா, ஜன.10 ; கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத்தீயால் நாசமான பகுதிகள் குண்டுவீசப்பட்ட இடங்கள் போல் தெரிவதாக, வீடுகளை இழந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட தீ மூன்றாவது நாளாக எரிவதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் பகுதியில் பிரபலங்களின் வீடுகள் உள்பட 1,500க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகிவிட்டன. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர். எரிந்து நாசமான தங்களது வீடுகளை அடையாளம் காண முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.







